Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர்களைக் கொண்ட குழுவினர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜயம்

Posted on December 12, 2025 by Admin | 447 Views

(அபூ உமர்)

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த கட்ட உதவிகளை வழங்குவதற்காக அட்டாளைச்சேனை அனர்த்த முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில் 200 பேர் கொண்ட குழுவினர் இன்று (12) அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்டனர்.

இக் குழுவில் மின்சார , நீர் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் அவற்றை திருத்துவதற்காக 50 electricians, plumbers செல்வதும் குறிப்பிடத்தக்கது.

இக் குழுவினரின் பயணமானது அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் என். எம். அப்துல் ஹபீல் (ரஷாதி) அவர்களினால் நிகழ்த்தப்பட்ட துஆப் பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ. எல். பாயிஸ், றியா மசூர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ. எல். நசீர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம். ஏ. அன்சார் (Rtd. Pr) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் இக்குழுவினரை வழியனுப்பியதுடன் பாதுகாப்பான பயணத்திற்கும் பயன்தரும் சேவைக்குமான வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.