Top News
| நாடளாவிய மின்தடைக்கான உண்மைக் காரணத்தினை வெளியிட்ட பிரதி அமைச்சர் | | 37 வருடகால கல்விச் சேவையிலிருந்து விடைபெறும் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். ரியாஸ் | | ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி! |
Oct 18, 2026

தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

Posted on December 18, 2025 by Admin | 471 Views

நிலவும் தொடர்மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாயத் தொடங்கியுள்ளதாக மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் ஆற்றை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கலாவெவ வடிநிலத்திற்குட்பட்ட கலாவெவ மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் முழு கொள்ளளவை அடைந்துள்ளதால் அது விரைவில் வான் பாயும் நிலை உருவாகக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் எச்சரித்துள்ளது.