கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த பிடியாணை அமலில் இருந்த நிலையிலேயே அவர் தற்போது கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.