தேசிய கல்வி நிறுவனம் (NIE) தயாரித்து தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு கற்றல் தொகுதியில்(module) ஒரின சேர்க்கையை ஊக்குவிக்கும் இணையதளத்தின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த முறைப்பாடு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த கற்றல் தொகுதியின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாளை (31) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.