Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

50 ரூபா பந்தயத்துக்காக பேனாவை விழுங்கிய மாணவன்

Posted on January 1, 2026 by Admin | 269 Views

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோத்தபேட்டையை சேர்ந்த சீனிவாச ராவின் மகன் முரளி கிருஷ்ணா 16 வயதையுடையவர். இவர் தற்போது கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 9ம் வகுப்பு படித்து வந்த காலத்தில் நண்பர்கள் வைத்த பந்தயத்தின் காரணமாக 50ரூபா பெறுவதற்காக முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டாலும் இதை பெற்றோரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

உடனடியாக அவர் குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரது பெருங்குடலில் பேனா இருப்பது கண்டறியப்பட்டது.

இந் நிலையில் கடந்த 18ஆம் திகதி முரளி கிருஷ்ணாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேனாவை விழுங்கிய சம்பவத்தை அவரது பெற்றோரிடம் நண்பர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் கவுண்டர் குழாய் மூலம் ‘ரெட்ரோகிரேட் எண்டோஸ்கோபி’ முறையை பயன்படுத்தி, எந்த அறுவை சிகிச்சையுமின்றி பெருங்குடலில் இருந்த பேனாவை வெற்றிகரமாக அகற்றினர். இந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.