2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் கடந்த ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்த ஆசிரியர் சம்பள உயர்வு இன்று (20) ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கல்விச் சேவை உட்பட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய ஆசிரியர்களின் உயர்த்தப்பட்ட சம்பளத் தொகை இன்றைய தினம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.