Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பொத்துவில் முச்சக்கர வண்டி தரிப்பிட ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை 

Posted on January 22, 2026 by Admin | 265 Views

(பொத்துவில் செய்தியாளர் – முஸால்)

பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான தரிப்பிட வசதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று (21) மாலை 4.00 மணியளவில் பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் பொத்துவில் பிரதேச சபை கெளரவ தவிசாளர் முஷாரப் தலைமையில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் பொத்துவில் நகரில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி மற்றும் மாற்றுத் திட்டங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் முக்கிய பங்காளிகளாக செயல்பட வேண்டும் என தவிசாளர் வலியுறுத்தியதுடன் நகரின் ஒழுங்குமுறை மற்றும் சேவை தரத்தை மேம்படுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் கௌரவ உப தவிசாளர் அலியார் மாபிர், கௌரவ உறுப்பினர் ஜெகன், RDA அதிகாரி, அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர், ஓய்வுபெற்ற அதிபர் சித்தீக் சேர், ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் கண்ணியத்துக்குரிய உலமா முகைதீன் பாவா மௌலவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

பொத்துவில் ஆட்டோ உரிமையாளர் சங்கத் தலைவர் அன்சார், செயலாளர் ஹம்மாத், முன்னாள் தலைவர் லாபிர், முன்னாள் செயலாளர் நிசாம் மற்றும் அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத் தலைவர் முஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டு தரிப்பிட ஒழுங்குமுறை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.