Top News
| நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | | மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்த அட்டாளைச்சேனை ரிபி ஜாயா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா | | மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சூடுபிடித்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் |
Jan 31, 2026

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு

Posted on January 22, 2026 by Admin | 155 Views

சமூக ஊடகங்களில் மக்கள் பாதிக்கப்படும் விதமாக நடைபெறும் பிரசாரங்களை ஒழுங்குபடுத்த சரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேதப் பொருட்கள் மற்றும் சில சிகிச்சை முறைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் விளம்பரங்களை தற்போது உள்ள சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

ஆனால் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய முழுமையான சட்டம் நாட்டில் இல்லாத நிலையில் இருப்பதாகவும் புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.