Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted on January 22, 2026 by Admin | 405 Views

முறையற்ற இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுமென GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதனிடையே கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் வைத்தியர்களின் கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அதற்கு எதிராக நாளை (23) முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.