(அட்டாளைச்சேனை செய்தியாளர்- அப்துல்லாஹ்)
கனடா டொரன்டோ நகரில் நடைபெற்ற 17வது தமிழ் மரபு மாதம் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ள உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கனடாவில் அமைந்துள்ள மஸ்ஜித் அல் ஐன்னா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினரையும் கனடாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரையும் சந்தித்து அவர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஏ.எல்.எம். நஸீர் அவர்களும் கலந்துகொண்டார்.

