Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

ஆதம்பாவா எம்பியின் தலைமையில் நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on January 27, 2026 by Admin | 201 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்- ரஜா)

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (27) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், மாநகர சபையின் பிரதி முதல்வர் யூ.எல். உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. ராசீக், உதவி தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநகர சபை உறுப்பினர்களான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், என்.டி. அஸ்மத், எஸ்.எம். சபீஸ், சபூர் ஆதம், ஜே. ராசி, எம். ரமீஸ், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை. ராசித், கணக்காளர் அப்துல் ரஹ்மான், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.