Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனைக்கு புதிய கணக்காளர் நியமனம்

Posted on January 27, 2026 by Admin | 382 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலங்கை கணக்காளர் சேவைத் தரத்தையுடைய உமர் லெப்பை முஹம்மட் றினோஸ் (SLACS) அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் புதிய கணக்காளராக இன்று (27) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இக் கடமையேற்பு நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது அக்கரைப்பற்று மாநகர சபையின் பதில் கணக்காளராகவும் கடமையாற்றி வரும் றினோஸ் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மத்தி மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி பணிமனைகளில் கணக்காளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.