Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அட்டாளைச்சேனை பிரதேச மாட்டிறைச்சி கடைக்காரர்களின் பகிஷ்கரிப்பு தோல்வியில் முடிந்தது

Posted on February 6, 2026 by Admin | 327 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஒழுக்க விதிகளை பின்பற்றாத மாட்டிறைச்சி கடைக்காரர்களின் உரிமங்களை இன்று(06) இரத்து செய்வதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் நேற்று(05) தெரிவித்திருந்தார்.

மாடறுக்கும் போது சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதுடன் பிரதேச சபையினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மக்களின் பார்வைக்காக ‌காட்சிப்படுத்தி இறைச்சிகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் பின்பற்றப்படுகின்றதா எனும் மேற்பார்வையினை பிரதேச சபையின் தவிசாளர் உவைஸ் தலைமையிலான குழு நேற்று மேற்கொண்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அனுமதி பெற்றுள்ள அதிகமான கடைகள் பிரதேச சபையின் சட்டதிட்டங்களை ஏற்க முடியாது எனக் கூறி நேற்று தங்களது கடைகளை மூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஒழுக்க விதிகளை பின்பற்றி வெள்ளிக்கிழமை(06) திறக்கப்படாத மாட்டிறைச்சி கடைகளின் உரிமங்களை இன்று(06) இரத்து செய்வதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் நேற்று(05) தெரிவித்திருந்தார்.

தவிசாளிரின
அதிரடியான இவ்வறிவித்தலை தொடர்ந்து இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து மாட்டிறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் அவர்களது பகிஷ்கரிப்பு தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.