Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரிய ஆலோசகரும் கைது

Posted on February 10, 2026 by Admin | 572 Views

தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவரும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேவையை விட்டு விலகியிருந்த முறைப்பாட்டாளரை மீண்டும் பணியில் இணைத்து கல்வி அமைச்சின் மூலம் தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட இணைப்பை தொடர்ச்சியாகப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதற்காக சந்தேகநபர்கள் 50,000 ரூபா இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொகையை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இன்று (10) பிற்பகல் தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்திற்குள்ளேயே வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தெஹியத்தகண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.