இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் வெளியிட்டிருந்த கடிதம் மீளப் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.
குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த அறிவிப்பு முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் 04ஆம் திகதிக்கு மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது