Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தியினால் அட்டாளைச்சேனையில் விசேட சொற்பொழிவு

Posted on February 21, 2026 by Admin | 146 Views

புனித ரமழான் மாதத்தின் ஆன்மிக மகத்துவத்தை முன்னிறுத்தி அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் ஆண்டுதோறும் நடத்தி வரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வின் 15வது வருட நிகழ்ச்சி இம்முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வானது வெள்ளிக்கிழமையைத் தவிர்ந்த அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணிக்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தின் ஆன்மிகப் பயன்களை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்த மஜ்லிஸ் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் இரண்டாவது தினமான நாளை (22) ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி அவர்களால் விசேட சொற்பொழிவு நிகழ்த்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆன்மிக நன்மைகளைப் பெறுமாறு அல்-இபாதா கலாசார மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.