Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

மார்ச் 1 முதல் நாடு முழுவதும் ‘போதைப்பொருள் ஒழிப்பு வாரம்’

Posted on February 24, 2026 by Admin | 139 Views

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2026 மார்ச் 1 ஆம் திகதி தொடங்கும் வாரம் “போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக” பிரகடனப்படுத்த தேசிய நடவடிக்கைப் பேரவை தீர்மானித்துள்ளது. இவ்வாரத்தின்போது அரச நிறுவனங்கள், பாதுகாப்பு துறைகள், கல்வி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை முன்னெடுக்க உள்ளன.

இந்தத் தீர்மானம் தொடர்பான அறிவிப்பு 24ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.