Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Posted on February 26, 2026 by Admin | 369 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-ஆரிப்)

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் நேற்றைய முன்தினம் (24.02.2026) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், மக்களிடமிருந்து முன்வைக்கப்பட்ட குறைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, நிலுவையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், உதவி பிரதேச செயலாளர் திருமதி. எப். நஹீஜா முஸாபிர், கணக்காளர் எம்.எப். பர்ஹான் மற்றும் திணைக்களத் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.