Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அம்பாறை மாவட்ட வன எல்லைப் பிரச்சினைகளை தீர்த்து பயனாளிகளுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை 

Posted on February 26, 2026 by Admin | 212 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

நிலையான வன மேலாண்மை திட்டத்தின் கீழ் வன எல்லைகளைத் தீர்த்து நீண்டகால பாரம்பரிய நிலங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்கான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியந்த விஜேரத்ன, மஞ்சுள ரத்நாயக்க, ஏ. ஆதம்பாவா, முத்து ரத்வத்தே , எம்.எஸ்.உதுமாலெப்பை , எம்.எஸ்.அப்துல் வாஸித், கே.கோடீஸ்வரன்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, பிரதேச செயலாளர்கள், காணி அதிகாரிகள், வன பாதுகாப்புத் துறை மற்றும் வனவிலங்குத் துறையின் தலைமை அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.