Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம்

Posted on March 18, 2026 by Admin | 415 Views

தேசிய பொருளாதார அமைச்சு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (QR குறியீடு) பெறுவதற்கான பதிவு செயல்முறையில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக விசேட WhatsApp சேவையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதிவு செய்வதில் சிக்கல்கள் எதிர்நோக்கும் நபர்கள் 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு தங்களது வாகன இலக்கத்தை அனுப்புவதன் மூலம் தேவையான உதவியைப் பெற முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றின் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

மேலும் வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்தத் தகுதியுடையவர் என்றும் வழங்கப்படும் அனைத்து தனிப்பட்ட தகவல்களும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.