Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவு உயர்வு

Posted on March 21, 2026 by Admin | 236 Views

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய திருத்தத்தின் படி வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:

  • மோட்டார் வாகனங்களுக்கு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை
  • முச்சக்கரவண்டிகளுக்கு 20 லீற்றர் வரை
  • வேன்களுக்கு 50 லீற்றர் வரை
  • மோட்டார் சைக்கிள்களுக்கு 8 லீற்றர் வரை
  • பேருந்துகளுக்கு 100 லீற்றர் வரை
  • நில வாகனங்களுக்கு 25 லீற்றரிலிருந்து 40 லீற்றர் வரை
  • குவாட்ரி சைக்கிள்களுக்கு 5 லீற்றரிலிருந்து 8 லீற்றர் வரை

அதே நேரத்தில், லொறிகளுக்கான 200 லீற்றர் ஒதுக்கீடும் விசேட தேவைக்கான வாகனங்களுக்கு வழங்கப்படும் 40 லீற்றர் ஒதுக்கீடும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.