Top News
| உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின | | காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள் | | நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு |
Apr 1, 2026

மூன்றே நாட்களில் தங்கத்தின் விலை 29,000 ரூபாய் வீழ்ச்சி

Posted on March 21, 2026 by Admin | 162 Views

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிவடைந்துள்ளதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் இன்று (21) வரை தங்கத்தின் மொத்த விலை சுமார் 29,000 ரூபாவால் குறைந்துள்ளது. இதில் 19ஆம் திகதி 13,000 ரூபாவும், 20ஆம் திகதி 6,000 ரூபாவும் குறைந்திருந்த நிலையில் இன்றைய தினம் மேலும் 10,000 ரூபா வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் எல்லைக்குக் கீழ் சரிந்ததே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அதன் விளைவாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், முதலீட்டு நடவடிக்கைகளின் மந்தநிலை மற்றும் எண்ணெய் விலையினால் அமெரிக்க டொலர் வலுவடைந்தமை ஆகியவை தங்கத்தின் விலை குறைவிற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையிலும் இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானதாக இருக்கக்கூடும் என்றும் எண்ணெய் விலை ஸ்திரமடைந்த பின்னர் தங்கத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.