ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று(20) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையைத் தொடர்ந்து உலகளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக இலங்கையின் எரிசக்தித் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த நிலையைக் கையாள அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்ததுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.