Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

Posted on April 4, 2026 by Admin | 377 Views

வவுனியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கஞ்சாவுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1 கிலோ 970 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நேரத்திலேயே குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் பாதுகாப்பில் எடுத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.