Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Posted on April 6, 2026 by Admin | 470 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்)

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அக்கரைப்பற்று , அம்பாறை, தெஹியத்தகண்டிய , மஹஓய போன்ற கல்வி வலயங்களில் வெற்றிடமாகவுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் துறையில் அனுபவமுடைய மற்றும் நிர்வாக திறன் கொண்ட அதிகாரிகள் இப்பதவிக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் I அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி 2026 ஏப்ரல் 30 என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது முழுமையான விபரங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தேவையான தகைமைகள், விண்ணப்ப முறைகள் உள்ளிட்ட விரிவான தகவல்களை கிழக்கு மாகாண சபையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ep.gov.lk மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.