Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

வாகனங்களில் வரப்போகும் புதிய மாற்றம்

Posted on April 26, 2026 by Admin | 322 Views

வரவிருக்கும் மே மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் இலங்கை காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வாகன காப்புறுதி சேவைகளை நவீனமயமாக்கி வாகன உரிமையாளர்களுக்கு எளிமையான மற்றும் காகிதமற்ற சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் பிளாஸ்டிக் அட்டைகளுக்கு மாற்றாக டிஜிட்டல் அட்டைகள் பயன்படுத்தப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.