Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டிய அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவனுக்கு கெளரவிப்பு

Posted on May 1, 2026 by Admin | 400 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீஸ்)

நடைபெற்ற மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் சார்பாக பங்கேற்று வெற்றியீட்டிய மாணவன் எப்.உமருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று(30) அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

மாணவனுக்கான சான்றிதழை வழங்கும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.பி.பாத்திமா நஸ்மியா அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழை வழங்கி வைத்ததுடன் அம்மாணவனை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தார்.

மாகாண மட்டம் வரை இம்மாணவன் போட்டியிடுவதற்கு  பின்னணியில் மாணவனை வழிநடத்திய அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர், ஆசிரியர்களான ஏ.ஏ.எம்.வாஸில், கே.எம்.றிஷ்வான், பாட இணைப்பாளர், பிரதி அதிபர்கள் ஆர்.எம்.ஜப்ராஸ், ஏ.ஏ.பனீஸ் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திலும் இவ்வாறான சாதனைகள் மூலம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மாகாண, தேசிய மட்டங்களில் மேலும் உயரங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.