Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மொழித்தின அரங்க நிகழ்வுகள்

Posted on May 7, 2026 by Admin | 291 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இவ்வருட அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிக்கான அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியின் அரங்க நிகழ்ச்சிகள் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.ஐ.ஹனீபா இஸ்மாயில் அவர்களின் வழிகாட்டுதலில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 2026.04.25ம் திகதி  சனிக்கிழமை இடம்பெற்றது.

பிரிவு 2,3,4 மாணவர்களுக்காக நடைபெற்ற இப் போட்டியில் அட்டாளைச்சேனை கோட்டத்தில் காணப்படும் பாடசாலைகளினது மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் அம்மாணவர்களுக்கான இட ஏற்பாட்டினை அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.அஜ்மீர் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தார்.

மாணவர்களின் மொழித் திறன், மேடைப்பேச்சுத் திறன், கலைநயம் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு அரங்க நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டன.

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்தினக் குழுவின் செயலாளர் ஆசிரியர் என்.பர்ஜூன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க குழு உறுப்பினர்களான ஆசிரியர்கள் கோபிநாத், பி.எம். ஆரிப், ரி. சியாத், ரமீஸ், சீமா, சிபா, ஜிப்ரியா, இர்ஸானா, பஸீனா மற்றும் நஸூஹா ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.