Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிக்க உதுமாலெப்பை எம்பி தொடர் முயற்சி

Posted on May 18, 2026 by Admin | 223 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அண்மையில் பிரதமரை சந்தித்து அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார். அச்சந்திப்பின் போது பாடநெறியை மீள ஆரம்பிப்பதற்கான தேவையை வலியுறுத்தியதையடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் பரிந்துரை செய்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நாலக கலுவெவவை இன்று(18) கல்வி அமைச்சில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.