Top News
| பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை |
Oct 15, 2026

பௌத்த தேரர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு தர்ம நீதிமன்றை மீண்டும் நிறுவ ஏற்பாடு

Posted on May 27, 2026 by Admin | 188 Views

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட ‘தர்ம நீதிமன்றம்’ மீண்டும் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கான சட்ட திருத்தங்களே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தின் திஹகொட மிதெல்லவல புராதன விகாரையில் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.