Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

யோஷித ராஜபக்‌ஷ கைது

Posted on June 17, 2026 by Admin | 131 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் இன்று காலை அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த கைதானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.