Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

துறைமுகங்கள், விமான சேவைகள் ஆலோசனைக் குழு உறுப்பினராக எம்.எஸ். உதுமாலெப்பை எம்பி நியமனம்

Posted on June 19, 2026 by Admin | 288 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் புதிய நியமனம் பெற்றுள்ளார்.

நீண்டகால அரசியல் அனுபவமும், மக்கள் பிரதிநிதித்துவமும் கொண்ட அவர் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் பல முக்கிய பொறுப்புக்களை வகித்து வருகிறார்.

பாராளுமன்ற சபை குழு உறுப்பினராகச் செயற்பட்டு வரும் அவர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு, விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, மின்வலு அமைச்சு ஆகியவற்றின் ஆலோசனைக் குழுக்களிலும் அங்கத்துவம் வகித்து வருகின்றார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுவிலும் அவர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.