Top News
| பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் | | காரைதீவு பிரதேசத்தின் துரித அபிவிருத்தி குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராய்வு |
Aug 30, 2026

பொத்துவில் அல்-மினா வித்தியாலயத்திற்கு அப்துல் வாஸித் எம்பி போட்டோ கொப்பி இயந்திரம் கையளிப்பு

Posted on August 26, 2026 by Admin | 61 Views

(பொத்துவில் செய்தியாளர் – ஹபீஸ்)

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்டம் பொத்துவில் அக் / அல் – மினா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் போட்டோ பிரதியாக்கி (Photocopy) இயந்திரமொன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான செயற்றிட்டங்களின் ஒரு கட்டமாகவே இந்த உபகரணம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாடசாலைகள், மதஸ்தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ச்சியாக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஊடாக கிராமிய மற்றும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அன்றாட கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும், பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் அத்தியாவசிய தேவையாகக் காணப்பட்ட குறித்த இயந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தமைக்காக பாடசாலை சமூகம் பாராளுமன்ற உறுப்பினருக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.