Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று அல்-முனவ்வரா மாணவி அனாபா | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் |
Oct 16, 2026

கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி

Posted on October 15, 2026 by Admin | 63 Views

(எம்.ஜே.எம்.சஜீத்)

இலங்கையிலுள்ள 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கிடையிலான ‘Inter-College Cultural Show – 2026’ கலாசாரப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி நாகானந்த சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்கால ஆசிரியர்களின் கலை, கலாசார ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கில் இந்த மாபெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘ஒரே மேடை பல கலாசாரங்கள்; எல்லையற்ற திறமைகள்’ என்ற தொனிப்பொருளில் அமைந்திருந்த இவ்விழா இலங்கையின் பல்லினக் கலாசார மரபுகள், பாரம்பரிய கலைகள் மற்றும் நவீன படைப்பாற்றல் ஆகியவற்றை ஒரே மேடையில் சங்கமிக்கச் செய்யும் ஒரு சிறந்த தளமாக அமைந்திருந்தது.

இவ்விழாவில் நாடளாவிய ரீதியிலுள்ள கல்வியியற் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர்கள் தமது அபார திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்களால் அரங்கேற்றப்பட்ட ‘கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாரம்பரிய மாப்பிள்ளை ஊர்வலம்’ காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

இலங்கையின் பன்முகக் கலாசாரப் பாரம்பரியத்தை விரிவாகப் பிரதிபலிக்கும் நோக்கிலும், மூவின சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்தச் சிறப்பு நிகழ்வு மிகச் சிறப்பாக ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த ஆசிரிய பயிலுனர்களின் பங்குபற்றுதலுடன் இசை, நடனம், நாடகம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகள் இங்கு வண்ணமயமாக அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.