(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
நாட்டை விஷப்பொருள் மற்றும் போதைப் பொருளிலிருந்து விடுவிக்கும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு” என்ற திட்டத்தின் கீழ் உறுதிமொழி நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (30) இடம்பெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டின் கீழ் பிரதேச செயலகத்தின் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சிகிச்சை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. எல். சனீர் அவர்களின் ஒருங்கிணைப்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ. சி. அகமத் அப்கர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து அதனை எதிர்த்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதியெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முசாபிர், கணக்காளர் சட்டத்தரணி எம். எப். பர்ஹான், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் கே. பி. சலீம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம். எஸ். ஏ. நியாஸ் உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் அனைத்து கிளைத் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.