Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நாளை உயர்தரப் பரீட்சை எழுதப்போகும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்

Posted on November 9, 2025 by Admin | 441 Views

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை (10) முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நாளை முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

இம்முறை பரீட்சைக்கு மொத்தம் 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2,46,521 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவார்கள்; 94,004 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என ஆணையாளர் குறிப்பிட்டார்.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை தொடங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

“பரீட்சையின் முழு காலப்பகுதியிலும், உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக முகம் திறந்த நிலையில் இருக்க வேண்டும். அதேபோல் காதுகளும் தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும். சிலர் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதால், பரீட்சை மோசடிகளைத் தடுப்பதற்காக இந்த விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.

அதனுடன் அவர் மேலும் தெரிவித்தார்:

“பல்தேர்வு வினாப்பத்திரங்களுக்கு விடையளிக்கும் போது, வினாப்பத்திரத்தில் விடைகளை எழுதலாம். எனினும், நாம் வழங்கும் விடைத்தாளில் குறிக்கப்பட்ட விடைகளே அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, பரீட்சார்த்திகள் நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்து, சரியான விடைத்தாளில் விடைகளை குறிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.