அம்பாறை மேல்நீதிமன்றம் இன்று (நவம்பர் 10) இரட்டை கொலை வழக்கில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2015 ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகள் கெஹலஉல்லப் பகுதியில் லொறியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர்வாசிகள் இருவரை தாக்கியதுடன் பின்னர் அவர்களை லொறியால் மிதித்து கொலை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று அம்பாறை மேல்நீதிமன்றம் குறித்த ஆறு பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.