2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான ஆறாவதுநாள் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்ட அவைத்தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மாகாண சபைத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் எந்தவொரு சூழலிலும் அந்த தேர்தல் தவிர்க்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சியை தோற்கடிக்க அரசாங்கத்தினால் நிச்சயமாக முடியும் என்றும் அவர் உரையில் கூறினார்.
“மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். அதில் எங்களுக்கு வெற்றி உறுதி,” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது உரையில் உறுதிப்படுத்தினார்.