Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சரிந்தது

Posted on November 15, 2025 by Admin | 501 Views

இன்று நாட்டில் தங்கத்தின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. நேற்றைய (14) மதிப்புகளுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் பவுன் ஒன்றின் விலையில் சுமார் 10,000 ரூபாய் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் விற்பனை நிலவரப்படி,

  • 24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 330,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    நேற்றைய தினம் இதன் விலை 340,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதேபோல் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் இன்று 305,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    நேற்று இது 314,500 ரூபாய் வரையில் இருந்தது.

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் தேவையில் ஏற்பட்ட சரிவுகள் காரணமாக இந்த விலை குறைவு ஏற்பட்டிருக்கலாம் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.