Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நாட்டின் முழுமையான வளர்ச்சி பொருளாதாரமும், சமூகமும், அரசியல் கலாசாரமும் முக்கியம் ஜனாதிபதி அறிவுரை

Posted on June 4, 2025 by Arfeen | 110 Views

பொருளாதார வெற்றிகள் மட்டும் நாடு ஒன்றை முழுமையாக அபிவிருத்தி செய்ய முடியாது என்றும், அதற்காக சமூக அபிவிருத்தி, அரசியல் கலாசாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து முன்னேற்றம் பெற வேண்டிய அவசியம் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.இன்று (ஜூன் 4) நிதி அமைச்சில் நடைபெற்ற திறைசேரி அதிகாரிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார். சீனா, கொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் முன்னெடுத்த முயற்சிகளால் வளர்ச்சி கண்டதாகவும், இலங்கையிலும் இது போன்ற ஒற்றுமை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.”தனிநபர்களுக்கு பொறுப்புகள் உள்ளன; ஆனால் நாட்டின் இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.அதிகாரிகளின் மீது தனது கருத்துகளைத் திணிக்கமாட்டேன் என்றும், நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இடையே கலந்துரையாடலின் மூலம் உரிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். கடந்த காலங்களில் தன்னிச்சையான அரசியல் தலையீடுகள் காரணமாக பல திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.அத்துடன், அரசாங்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு ஏற்ப முக்கிய நிறுவனங்களில் கட்டமைப்புசார் மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்தார்.இலங்கையின் பொருளாதார நிலையை பாதிக்கக்கூடிய சர்வதேச நாணய நிதியின் நீடிக்கப்பட்ட கடன் திட்டம், அமெரிக்காவின் புதிய வரிகள், மற்றும் 2027 GSP+ சலுகை தொடர்பிலும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்