Top News
| அனர்த்தத்தில் உதவிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கும் மக்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் நன்றி நவின்ற உதுமாலெப்பை எம்பி | | மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தல் | | வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு |
Dec 16, 2025

சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அரச வைத்தியர்கள் சங்கம் 48 மணி நேரம் அவகாசம்

Posted on November 24, 2025 by Admin | 110 Views

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பொறுப்புடைய அதிகாரிகளுக்கு 48 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அவகாசத்திற்குள் தெளிவான தீர்வுகள் முன்வைக்கப்படாவிடில் வரும் 26ஆம் திகதி நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வைத்தியர்களும் சுகாதாரத் துறையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான காலவரையறையுடன் கூடிய செயல்திட்டத்தை அறிவிக்க வேண்டியது அவசியம் எனவும், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இது தவிர்க்க முடியாத நடவடிக்கை எனவும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.