Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

காசா நரகத்தைவிட மோசமாக மாறியுள்ளது

Posted on June 5, 2025 by Admin | 145 Views

காசாவின் தற்போதைய நிலை நரகத்தையுங்கூட மீறியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்யாரிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மனித நேயம் இன்று பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

போரையும், பாலஸ்தீன மக்களின் துயரத்தையும் முடிவுக்கு கொண்டுவர, மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க சர்வதேச நாடுகள் செயற்பட தவறியுள்ளன என அவர் விமர்சனம் செய்தார்.

காசாவில் உள்ள ஒரு நிவாரண மையத்திற்கு அருகில், உதவி பெற வந்த பொதுமக்கள்மீது இஸ்ரேல் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து அவர் பேசும் போதே, இந்த அதிரடியான கருத்துகள் வெளியாகின.