Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை

Posted on June 5, 2025 by Admin | 395 Views

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள கணிப்பின் படி, நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் ஆகிய இடங்களில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடியுடன் கூடிய மழை ஏற்பட்டால் ஏற்படக்கூடிய விபத்துகளை தவிர்க்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.