சீரற்ற வானிலை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் நாடு முழுவதும் பல முக்கிய பாதைகள் மற்றும் பாலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகன் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, பிரதான பாதைகள் உட்பட மொத்தம் 206 பாதைகள் இப்போது போக்குவரத்துக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
மேலும், 10 பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன், நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் அனைத்து வழிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.