Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

ஒரு கிலோ கேரட்டை 3500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்குப் பதிவு

Posted on December 4, 2025 by Admin | 290 Views

காலி மாவட்டத்தில் ஒரு கிலோ கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மோசமான வானிலை காரணமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் வர்த்தகர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகள் சோதனை செய்யப்பட்ட போது ஒரு வியாபாரி கேரட்டின் விலையாக ஒருகிலோக்கு 3,500 ரூபாய் வசூலித்து வந்தது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.