Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

மழைக்காலம் காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு பரவும் அபாயம்

Posted on June 5, 2025 by Arfeen | 518 Views

நிலவும் மழைக்கால சூழ்நிலை காரணமாக சிக்குன்குன்யா மற்றும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் நாடு முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையை கல்வி அமைச்சுக்கு சுகாதார அமைச்சு அனுப்பியுள்ளது.மேலும், கடந்த மே 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் பதிவான டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.