Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

இன்று நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Posted on December 12, 2025 by Hafees | 385 Views

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், மேலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.