Top News
| மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தல் | | வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு | | பிட்டு கேட்ட கணவனின் மண்டையை கோடாரியால் பதம் பார்த்த மனைவி |
Dec 16, 2025

மல்யுத்த ஜாம்பவான் ஜோன் சினாவின் இறுதிப் போட்டி நாளை

Posted on December 13, 2025 by Admin | 133 Views

மல்யுத்த உலகின் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் WWE ஜாம்பவான் ஜோன் சினா தனது இருபது ஆண்டுகால பிரகாசமான மல்யுத்த வாழ்க்கைக்கு விடை கொடுக்கத் தயாராக உள்ளார். நாளை (14) அவர் தனது கடைசி WWE இன்-ரிங் போட்டியில் பங்கேற்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Saturday Night’s Main Event எனப்படும் முக்கிய நிகழ்வின் மெயின் ஈவென்ட்டில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் ஜோன் சினா சக்திவாய்ந்த மல்யுத்த வீரர் குந்தர் (GUNTHER) உடன் மோதவுள்ளார்.

இந்தப் போட்டி ஜோன் சினாவின் புகழ்பெற்ற 20 ஆண்டுகால மல்யுத்த வாழ்க்கையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகிறது. அவரது இறுதிப் போட்டிக்கான எதிர் போட்டியாளரை தெரிவு செய்வதற்காக “Last Time Is Now” என்ற சிறப்பு போட்டி நடத்தப்பட்டதுடன் அதில் குந்தர் வெற்றி பெற்றதன் மூலம் ஜோன் சினாவுடன் மோதும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்த முக்கியப் போட்டி நாளை இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும். இலங்கையில் உள்ள ரசிகர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை எதிர்வரும் 15ஆம் திகதி காலை 6.30 மணிக்கு காண முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.