Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

டிக்டொக்கில் அறிமுகமான நட்பினால் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

Posted on December 17, 2025 by Admin | 196 Views

ஈச்சலம்பட்டு கடற்கரையில் பாடசாலை மாணவியொருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அப்பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியெனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரது மூன்று நண்பர்களும் அதே பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்டொக் சமூக வலைதளம் மூலம் சந்தேக நபர் மாணவியுடன் அறிமுகமாகியுள்ளதாகவும் பின்னர் நேரில் சந்தித்து பேச வேண்டுமென கூறி லங்கா பட்டுன விஹாரைக்கு பின்னால் உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியும் சந்தேக நபரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் அவரது மூன்று நண்பர்கள் அங்கு வந்ததாகவும் பின்னர் மாணவியை அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மாணவி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஈச்சலம்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.