Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசையில் முதல், இரண்டாம் இடங்களில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை

Posted on June 6, 2025 by Admin | 453 Views

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் திறன் அடிப்படையில் manthri.lk இணையதளம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில்,

திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நிஸாம் காரியப்பர் முதலிடத்தை பெற்றுள்ளார். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் மதிப்பீட்டில் அவர் 17வது இடத்தில் உள்ளார்.

இதே மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் எம்.பி. எம்.எஸ். உதுமாலெவ்வை இரண்டாவது இடத்தில் உள்ளார். தேசிய ரீதியாக அவர் 58வது இடத்தில் இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எம்.ஏ.எம். தாஹீர் உள்ளார். அவர் தேசிய ரீதியில் 73வது இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு எம்.பி. தேசிய மக்கள் சக்தியின் அபூபக்கர் ஆதம்பாவா நான்காவது இடத்தில் உள்ளார். 225 பேரில் அவர் 192வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.